தமிழகத்தின் பினாமி குயின் சசிகலா: அதிர்ச்சி தரும் ஆய்வுப்படம்

Must read


றப்போர் இயக்கம், “WHO IS THE  BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் ஆய்வுப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்தவர்கள் 43 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் இருந்தும், அறப்போர் இயக்கத்தைச் சேர்ந்த ஆடிட்டர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலமும் கூடுதல் தகவல்களை அதில் சேர்த்துள்ளனர்.
நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில், சசிகலா மற்றும் அவரது உறவினர்கள்  31 நிறுவனங்களுக்கு பினாமியாக இருப்பதாக சொல்லியிருந்தார். மீதமுள்ள 12 புதிய நிறுவனங்கள் குறித்த தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளன.

சொத்துக்குவிப்பு வழக்கில் சேர்க்கப்பட்ட நிறுவனங்களில் தொடர்ந்து அதிக அளவில் முதலீடு செய்யமுடியாது என்பதால், பல புதிய நிறுவனங்களை சசிகலா மற்றும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் ஆரம்பித்துள்ளதாகவும்,  இந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெறும் 7 ஏக்கர் நிலத்துக்கு சொந்தக்காரராக இருந்தவர், எந்த வேலையும் செய்யாமல் எந்த அலுவலகமும் செல்லாமல் எவ்வாறு பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார். என்பது உள்ளிட்ட பல கேள்விகளை முன்வைக்கிறது இந்த ஆய்வுப்படம்.
.’பினாமியாக இருந்த சசிகலா, தற்போது அந்த நிறுவனங்களின் உரிமையாளராக ஆகியுள்ளார்’ என்றும் இந்தப் படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article