வரலாறு முக்கியம் அமைச்சரே:
அக்டோபர் 2015 வாக்கில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை:
“ஜெயலலிதா தோழி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துக்கள் பற்றி சிபிஐ விசாரணை செய்ய வேண்டும். சொத்துக்குவிப்பு வழக்கு முடியாத நிலையில் மேலும் ரூ.1000 கோடி சொத்துக்களை அதிமுக ஆட்சி அதிகாரத்தின் மூலம் சசிகலா வாங்கியுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பை துச்சமாக காலில் போட்டு மிதித்து சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளனர்.
அதிமுக ஆட்சியில் கோடான கோடி ரூபாயை சசிகலா கும்பல் கொள்ளையடித்துள்ளது. கொள்ளையடித்த பணத்தில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளது.
சசிகலா சொத்து வாங்கிய புகாரின் சந்தேக நிழல் முதலமைச்சர் ஜெயலலிதா மீதும் படிந்துள்ளது. ஜனநாயக நாட்டில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக் கொண்டு கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும் என்று கூறிய அவர், கொள்ளையடிப்பவர்கள் யாராக இருந்தாலும் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். விசாரணை நடத்தி கொள்ளையடித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்று வைகோ அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.