சென்னை:

ஜெயலலிதா மரணம் மரம்ம் தொடர்பாக விசாரித்து வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதிமுக கட்சியினர் மட்டுமின்றி அரசியல் கட்சியனர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியதால், அவரது மரணம் குறித்து விசாரணை செய்ய  ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் ஜெ. மரணம் தொடர்பாக, அரசு முன்னாள் தலைமை செயலாளர்கள், அவரது வீட்டு வேலைக்காரர்கள், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட ஏராளமானோரிடம் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று  பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவுக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியது.

இதுகுறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பிய சசிகலா, ஆணையத்துக்கு பதில் அளிக்க தாமதப்படுத்தி வந்தார். இந்நிலையில், உரிய காலத்திற்குள் சசிகலா  தாக்கல் செய்யப்படாவிட்டால், தானே சிறைச்சாலைக்கு நேரில் சென்று  விசாரணை நடத்த நேரிடும் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இநநிலையில், சசிகலா தரப்பில் பிரமாண வாக்குமூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவர் சார்பாக அவரது வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார்.  மேலும்,  இனி ஆணையத்தில் ஆஜராகவுள்ள சாட்சியங்கள் குறித்து தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், தேவைப்பட்டால் அவர்களிடம்  நாங்கள் அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்வோம் என்று சசிகலா தரப்பு  வழக்கறிஞர் அரவிந்தன் கூறினார்.