2 பாரதீய ஜனதா தலைவர்கள் மீது வழக்குத் தொடுத்த சசி தரூர்

Must read

திருவனந்தபுரம்: தன்னைக் குறித்து அவதூறாக பேசியதற்காக, மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மற்றும் கேரள மாநில பா.ஜ. தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூர்.

இவர் தற்போது திருவனந்தபுரம் தொகுதியினுடைய காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிதரூர் குறித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ‘கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்’ என்று கூறியிருந்தார். மேலும், அதுகுறித்து சமூகவலைதளங்களில் பதிவிடவும் செய்தார்.

இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சசிதரூர், அமைச்சர் மன்னிப்பு கேட்க வேண்டுமெனக் கோரியும், மன்னிப்பு கேட்கப்படாததால், தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

மேலும், சபரிமலையில் நடந்த நமஜபா போராட்டத்தின்போது, கலந்துகொண்ட பெண்கள் குறித்து, அம்மாநில பாரதீய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை, அவதூறான கருத்து தெரிவித்ததற்காக மன்னிப்பு கேட்க கோரியும் கேட்கப்படாததால், ஸ்ரீதரன் பிள்ளை மீதும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

– மதுரை மாயாண்டி

More articles

Latest article