திருவனந்தபுரம்:

நான் அமர்ந்திருக்கும் இடத்தில் துலாபாரம் முள் (தராசு) விழுந்து காயம் ஏற்படுத்தியது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என காங்கிரஸ் எம்பி.சசிதரூர் கோரிக்கை விடுத்துள்ளார்.


திருவனந்தபுரம் காந்தாரி அம்மன் கோயிலில் நடைபெற்ற துலாபாரம் நிகழ்ச்சியில் திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி. சசிதரூர் பங்கேற்றார்.

துலாபாரம் முள் உடைந்து சசிதரூர் மீது விழுந்ததில் அவருக்கு தலையிலும்,காலிலும் காயம் ஏற்பட்டது.
உடனே அருகில் இருந்த மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு 6 இடங்களில் தையல் போடப்பட்டது.

சிகிச்சைக்குப் பின் சசிதரூர் கூறும்போது, 83 வயதான என் தாயார் துலாபாரம் முள் உடைந்து பார்த்ததில்லை.
இது குறித்து விசாரிக்குமாறு போலீஸாருக்கு நான் கடிதம் எழுதியுள்ளேன். இதுபோன்ற சம்பவம் மீண்டும் யாருக்கும் நடக்கக் கூடாது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருவனந்தபுரத்தில் என்னை எதிர்த்துப் போட்டியிடும் இடதுசாரி வேட்பாளர் சி.திவாகரன் ஆகியோர் என் உடல்நலம் குறித்து விசாரித்தனர் என்றார்.