பாட்னா: பீகாரில் கொரோனா அதிகரிப்பால் கல்லூரிகளை மாநில அரசு மூட உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் உச்சம்பெற்று வருகிறது. பீகார் மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், கல்வி நிலையங்களை மூட மாநில அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால், ஷாஷாராம் பகுதியில் உள்ள அனைத்து கல்வி பயிற்சி நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஷாஷாராம் பகுதியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டம் வன்முறை களமாக மாறியது. கற்களை வீசியும், அரசு சொத்துகளை சேதப்படுத்தியும் மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர்.இதையடுத்து, களமிறங்கிய போலீசார் ஆர்பாட்டக்காரர்களை தடியடி நடத்தி அங்கிருந்து விரட்டியடித்தனர். இதில் சில மாணவர்கள் காயம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]