திருவள்ளூர்: ‘சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’ என ஆபாசமாக கானா பாடல் பாடி அதை யுடியூபில் வெளியிட்ட ‘சரவெடி சரண்’ என்ற காணா பாடகர் கைத செய்யப்பட்ட நிலையில், மன்னிப்பு கோரியதால் உடனே விடுவிக்கப்பட்டுள்ளார்.

சரவெடி சரண் (26) என்ற  பெயரிலான இளைஞர் ஒருவர்  கானா பாடல் பாடி வருகிறார். இவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்  சமீபத்தில் பாடிய பாடல் குழந்தைகளை பாலியல் சேட்டை செய்யும்படி வலியுறுத்துவதாக இருந்தது.

‘மஜாவாக மாட்டிக்கிச்சு எனக்கு ஏத்த லடுக்கி (சிறுமி)…

பால்வாடியில வாங்கி கொடுத்தேன் பூந்திய…,

எட்டாவது பாஸாயிட்டு எடுக்க வச்சேன் வாந்திய…’

என்ற சர்ச்சையான வரிகளுடன், தான் பாடிய பாடலை அவரின் யூ-ட்யூப் பக்கத்தில் பதிவேற்றம் செய்திருந்தார்.’சிறுமியைக் கர்ப்பமாக்குவேன்’  என பாடியிருந்ததை கண்ட பலர் கடுமையாக கண்டனம் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழ்நாட்டில் குழந்தைகள், பள்ளி மாணவிகள் மீதான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில, கானா பாடகரின் பாடல் மேலும் பாலியல் வன்முறையை தூண்டும் வகையிலேயே இருந்தது, இதுகுறித்த அற்தந திருவள்ளூர் காவல் கண்காணிப்பாளர் வருண் குமார் அந்த இளைஞர் மீது போக்சோ சட்டத்தின் 16ஆவது பிரிவின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

இதையடுத்து, அவரை தேடும் பணி நடைபெற்றது. நேற்று இரவு சரவெடி சரணை  திருவள்ளூர் மாவட்ட சைபர்கிரைம் காவல்துறையினர் கைது செய்தனர். சென்னையில் கைது செய்து திருவள்ளூர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் சரவெடி சரணின் இயற்பெயர் சரவணன் என்பதும், சென்னை பெரம்பூர் அடுத்த செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. இந்த பாடல்  கடந்த 2020 மார்ச் மாதம் வெளியாகியதாகவும், அவருடன் டோனி ராக் என காணா பாடகரும் இணைந்து பாடியதும் தெரிய வந்தது.

அவர்களிடம் சுமார் 2மணிநேரம் விசாரணை மேற்கொண்ட  காவல்துறையினர், பாடலுக்கு அந்த கானா பாடகர்கள் மன்னிப்பு கோரியதால், காவல் கண்காணிப்பாளர் அவர்களை எச்சரித்ததுடன்,  அறிவுரை வழங்கினார்.  மேலும், சரணிடம் மன்னிப்பு கடிதம் பெற்று காவல் நிலைய பிணையில் அவரை விடுவித்தார்.

இதையடுத்து கானா பாடகர் சரவெடி சரண் வெளியிட்டுள்ள புதிய காணொலி பதிவில், தான் பாடிய பாடல் யார் மனதும் புண்படுத்தி இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக வருத்தம் தெரிவித்து உள்ளார்.