சரவணபவன் ராஜகோபாலுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை! உயர்நீதி மன்றம் அனுமதி!

Must read

சென்னை:

கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள  சரவணபவன் ராஜகோபால் உயிருக்கு ஆபத்தான நிலையில், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில், சென்னை உயர்நீதி மன்றம் அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி வழங்கி உள்ளது.

பிரபல ஓட்டலான சரவணபவன் அதிபர் ராஜகோபால், ஜீவஜோதியின் கணவர் பிரின்ஸ் சாந்த குமார் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் அவதிப்பட்டு வரும் ராஜகோபால், உச்சநீதி மன்ற உத்தரவுபடி, அதன்படி, கடந்த வாரம் சரணடைந்த  ராஜகோபாலுக்கு சிறைக்கைதிகளுக்கான வார்டில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரது உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததால், அவரை உடடினயாக ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்து,  செய்றகை சுவாசம் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து,  அவரது மகன் சரவணன்,  ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளிக்கவேண்டும் என்று உயிர்நீதிமன்றத்திடம் மனு அளித்திருந்தார். இந்த மனுமீது இன்று விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள்,  ராஜகோபாலை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள  ஸ்டான்லி மருத்துவமனை டீன் , ராஜகோபால் மிகவும் கவலைக் கிடமாக இருப்பதால் அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்றுவது மிகவும் சிக்கலானது என்று கூறி உள்ளார்.

More articles

Latest article