ஹைதராபாத்:
பிரபல நடிகர் சரத் பாபு உடல்நலக் குறைவால் ஹைதராபாத்தில் காலமானார்.

நடிகர் சரத் பாபு உடல் நலக் குறைவு காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்பட்டன. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சரத்பாபு இன்று உயிரிழந்தார்.

72 வயதான நடிகர் சரத்பாபு கிட்டத்தட்ட 50 வருடங்களாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் முள்ளும் மலரும், உதிரிபூக்கள், நெஞ்சத்தை கிள்ளாதே, நெற்றிக்கண், வேலைக்காரன், அண்ணாமலை போன்ற பல படங்களில் நடித்தவர் சரத்பாபு. ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைக்கும் கதாப்பாத்திரங்கள் அனைத்திலும் முத்திரை பதித்துள்ளார்.