கொல்கத்தா:

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், உச்சநீதி மன்றம் உத்தரவை தொடர்ந்து, கொல்கத்தா காவல்ஆணையர் ராஜீவ் குமார் இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரிடம் சிபிஐ கிடுக்கிப்பிடி கேள்விகளை எழுப்ப ஆயத்தமாகி உள்ளது.

சாரதா நிதி நிறுவன மோசடி தொடர்பான வழக்கில், சிபிஐ விசாரணைக்கு ஆஜராகாத கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ் குமாரிடம் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் காரணமாக மம்தா பானர்ஜி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உச்சநீதி மன்றத்தில் சிபிஐ வைத்த கோரிக்கையை தொடர்ந்து, சிபிஐ விசாரணைக்கு  ஆஜராக ராஜீவ்குமாருக்கு  உத்தரவிட்டது.

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் சில ஆவணங்கள் மாயமானது தொடர்பாக சிபிஐ விசார ணைக்கு ஒத்துழைக்க அறிவுறுத்திய உச்சநீதி மன்றம், மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில், கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாரிடம்  சிபிஐ விசாரண நடத்த வேண்டும் என்றும், அவரை கைது செய்யக்கூடாது என்றும்  உத்தரவிட்டது.

இந்த நிலையில், இன்று விசரணை நடைபெற உள்ளது. விசாரணைக்கு  ராஜீவ்குமார் ஆஜர் ஆவார் என தெரிகிறது. அவரிடம்  சிபிஐ அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட கேள்விகளை எழுப்பி கிடுக்கிப் பிடி  விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.