டில்லி:

டில்லி மாநில முதல்வரும், ஆம்ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக தொண்டர்கள்  திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவமாக உயிர் தப்பினார்.

இது பாஜகவினரின் திட்டமிட்ட தாக்குதல் என்று  ஆத்ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.

டெல்லியில் ஆம்ஆத்மி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  மாநில முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால்  இருந்துவருகிறார்.

டில்லியில் உள்ள நரிலா பகுதியில்  வளர்ச்சி திட்டப்பணிகள் தொடக்க விழாவுக்கு  சென்று கொண்டிருந்த அவர்து கார் மீது 100க்கும் மேற்பட்டோர் கைகளில் தடிகளுடன் சந்திக்க முயன்றனர். ஆனால் உஷார் அடைந்த கார் ஓட்டுநர், காரை நிற்காமல் செலுத்தி விட்டார். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள்  தாங்கள் வைத்திருந்த கம்புகளை கார் மீது எறிந்து தாக்குதல் நடத்தினார்.

இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், ஆம் ஆத்மி தொண்டர்களும் திரண்டனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஓடிவிட்டனர்.

இந்த திடீர் தாக்குதலில்  யாருக்கும் காயமில்லை என்றும், இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக  காவல்துறை தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சி சார்பிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், அடையாளம் தெரியாத நபர்கள் முதல்வர் கெஜ்ரிவால் காரின் கண்ணாடியை உடைக்க முயற்சி செய்ததாக கூறி உள்ளது.

ஆனால், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தங்கள் கைகளிள் பாஜக கொடியுடன் கூடிய கம்புகளை வைத்திருந்ததாகவும் அதைக்கொண்டே கார்மீது தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்ததுள்ளது.

அரசியலை நேரடியாக எதிர்கொள்ள முடியாமல், இதுபோன்ற அடாவடி செயல்களில் பாஜக தலைமை இருப்பதாக ஆம் ஆத்மி கட்சியினர் குற்றம் சாட்டி உள்ளனர்.