லண்டன்: வரலாற்றுப் புகழ்மிக்க மார்லிபோன் கிரிக்கெட் கிளப்பின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சங்ககாரா.

இந்த அமைப்பின் தலைவர் பொறுப்பை ஏற்கும் பிரிட்டன் நாட்டைச் சேராத முதல் நபர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்பதவியை இவர் ஓராண்டு காலம் வகிப்பார்.

கடந்த மே மாதம் லண்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த எம்சிசி அமைப்பின் வருடாந்திரக் கூட்டத்தில், இவரின் பெயரை முன்மொழிந்தார் இப்போது வெளியேறும் தலைவர் ‍அந்தோனி ரெ‍‍ஃபோர்டு.

சங்ககாரா கூறுகையில், “இந்த கவுரவம் வாய்ந்த பொறுப்பை ஏற்பதில் சிலிர்ப்படைகிறேன். அடுத்துவரும் நாட்களில் கடுமையாக உழைப்பை செலுத்தி, அமைப்பின் இலக்கை அடைய முயல்வேன்.

நாங்கள் விரும்பும் கிரிக்கெட்டிற்கு அதிக ஆதரவாளர்களை உருவாக்கி, உள்ளூர், தேசிய மற்றும் உலக அளவில் எம்சிசி அமைப்பின் அருமையான பணியைப் பற்றி அவர்களுக்குப் புரியவைக்கும் வாய்ப்பினைப் பெற்றுள்ளோம்” என்றார்.