கன்னடம், தெலுங்கு, தமிழ் படங்களில் நடித்து வருபவர் பெங்களூரை சேர்ந்த சஞ்சனா கல்ராணி. அவர் டாக்டர் அஜீஸ் பாஷா என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.

கணவரின் பெயரை முதுகில் பச்சை குத்தியிருக்கிறார். இந்நிலையில் அந்த டாட்டூ புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு சஞ்சனா

என் இதயத்திற்கு நெருக்கமான டாட்டூவை வெளியிடுகிறேன். தேவையில்லாத கிசுகிசுக்கள், கேரக்டரை அசிங்கப்படுத்தும் பேச்சுகளை தவிர்க்கவே இத்தனை ஆண்டுகளாக இதை மறைத்து வைத்திருந்தேன். தற்போது நாங்கள் திருமணம் செய்து கொண்டுவிட்டதால் வெளியிடுகிறேன்.

நடிகையாக இருப்பதால் பல தரப்பட்ட ஆண்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கள், ஒன்று அல்லது இரண்டு முறை பார்த்த நண்பர்களுடன் கூட சேர்த்து வைத்து பேச்சு வருவது வேடிக்கையாக இருக்கும். ஆனால் நான் உண்மையை பேசுகிறேன்.

நான் ராக்கி கட்டிய சகோதரரை கூட என் காதலர் என்று பேசினார்கள். அதனால் பொது இடங்களில் சகோதரருடன் பல முறை பார்க்கப்பட்டால் கூட அவர் காதலராகிவிடுவாரா? நான் எப்படி ஃபீல் செய்திருப்பேன்? இது மனதளவில் பாதிப்பது இல்லையா?

அந்த நண்பர் அல்லது நலம் விரும்பி ஒரு பிரபல நடிகராகவோ, அரசியல்வாதியாகவோ, கிரிக்கெட் வீரராகவோ இருந்தால் அது நட்பையும் தாண்டியது என்று எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசுவார்கள். 1000 கதை சொல்வார்கள். 2021ம் ஆண்டிலும் கூட இப்படி இருக்கிறார்கள் என்பது கவலை அளிக்கிறது.

ஆனால் இதற்கு இடையே உண்மை காதலர்கள் தான் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். நான் காதலிக்கும் நபருக்காக அவர் பெயரை என் உடம்பில் பச்சை குத்தினேன். லவ் யூ அஜீஸ்…கடந்த 15 ஆண்டுகளில் நல்ல நண்பராக, காதலராக, கணவராக, தந்தை போன்ற வழிகாட்டியாக நீங்கள் என்னுடன் இருப்பதற்கு ஆண்டவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CQ-mAeXsxTu/