சென்னை
சென்னை உயர்நீதிமன்ற 50ஆம் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது சென்னை உயர்நீதிமன்ற 49 ஆவது தலைமை நீதிபதியாகக் கடந்த ஆண்டு நவம்பர் 11 முதல் ஏ பி சாஹி பதவி வகித்து வருகிறார். இன்றுடன் இவரது பணிக்காலம் நிறைவடைந்து ஓய்வு பெறுகிறார். எனவே நாளை முதல் 50 ஆவது தலைமை நீதிபதி பொறுப்பு ஏற்க உள்ளார்.
கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியைச் சென்னை உயர்நீதிமன்ற அடுத்த தலைமை நீதிபதியாக உச்சநீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை ஏற்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் பானர்ஜியை நியமித்துள்ளார்.
சஞ்சீவ் பானர்ஜி தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி பதவி வகித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மட்டுமின்றி, டில்லி, மும்பை, ஜார்க்கண்ட், கவுகாத்தி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அரியான உள்ளிட்ட உயர்நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளவர் ஆவார்.