சென்னை: மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சிப் பானர்ஜி இன்று பதவி ஏற்றார்.. அவருக்கு கவர்னர் பன்வாரிலால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் இந்தபதவி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நீதிபதி ஏபி. ஷாகி பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், புதிய தலைமை நீதிபதியாக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி சஞ்சிப் பானர்ஜியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக நீதிபதி சஞ்சிப் பானர்ஜி இன்று பதவி ஏற்றார். ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்து பதவி பிரமாணம் செய்துவைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சஞ்சிப் பானர்ஜி தற்போது கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்து வருகிறார். இவர் ஏற்கனவே டில்லி, மும்பை, ஜார்க்கண்ட், கவுகாத்தி, கர்நாடகா, மத்தியப் பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநில நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணியாற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.