எடப்பாடி ஆட்சி நீடிக்க அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான் காரணம்! ராஜேந்திர பாலாஜி

Must read

சென்னை: அதிமுக ஆட்சி நீடிக்க அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான் காரணம் என மற்றொரு அமைச்சரான  ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார். இது அதிமுக தலைவர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதிமுகவில் சரியான தலைமை இல்லாத நிலையில், எடப்பாடி தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இடையிடையே ஓபிஎஸ்சின் நடவடிக்கை காரணமாக அவ்வப்போது பூசல்கள் எழுவதும் தொடர்ந்துவருகின்றன. தற்போதைய தமிழகஅரசியல் சூழல், அதிமுக திமுகவுக்கு இடையே கடுமையான போட்டிகளை ஏற்படுத்தி வருகிறது. திமுக ஆட்சியை கைப்பற்றியே ஆக வேண்டும் என்ற உத்வேகத்துடன் பணியாற்றி வருகிறது. அதிமுக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பணியாற்றி வருகிறது.  திமுகவுக்கு டஃப் கொடுக்கும் வகையில், அதிமுக அதிரடியாக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி ஆட்சிக்கு தலைவர் என்றும், ஓபிஎஸ் கட்சிக்கு தலைவர் என்றும் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு இடையே சமாதானம் ஏற்பட்டு,   எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் தொடர்ந்து வருகிறது.

தற்போது தமிழக சட்டமன்ற பேரவையின் காலம் முடிவு கட்டத்துக்கு வந்துள்ளது.  இந்த நிலையில், சர்ச்சை புகழ் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, எடப்பாடி ஆட்சி நீடிக்க அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும்தான் காரணம் என்று கூறியுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சமீப காலமா கஅமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள், சர்ச்சைக்குரிய வகையிலும்,  வன்முறையை தூண்டும் விதமாக உள்ளது. ஏற்கனவே ஓபிஎஸ் மகனை வழிமறித்து போராட்டம் நடத்தியது குறித்து பேசும்போது, அவர்களின் கைகளை உடைக்கத் தெரியும் என்று அதிரடியாக கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,   கமல் நாக்கை அறுப்போம் என்றும் மிரட்டல் விடுத்தார்.

அதுமட்டுமின்றி ஞ்சை மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலை காவிச்சாயம் பூசப்பட்டு, அவமதிக்கப்பட்டவிவகாரத்தில், திருவள்ளுவர் நாத்திராக இருக்க வாய்ப்பே இல்லை என்று சர்ச்சை ஏற்படுத்தியதுடன்,  சில நேரங்களில் ரஜினிக்கு ஆதரவாகவும், சசிகலாவின் வருகையை எதிர்ப்பார்ப்பதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து  சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வருவது அதிமுக தலைவர்களிடையே முகம் சுளிக்க வைத்துள்ளது.

More articles

Latest article