சஞ்சய் புகாலியாவை வளைத்தது அதானி குழுமம்…. ஊடக துறையில் அம்பானிக்குப் போட்டியாக கால்பதிக்கும் முயற்சி

Must read

 

சமயல் எண்ணெய் முதல் மின்சாரம் தயாரிப்பது வரை பல்வேறு துறைகளில் கொடிகட்டி பறக்கும் அதானி நிறுவனம் அடுத்ததாக மீடியா எனும் ஊடகத்துறையில் கால்பதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.

சஞ்சய் புகாலியா

அதற்காக, ஊடகத்துறையில் அனுபவம் வாய்ந்தவரான சஞ்சய் புகாலியா அதானி நிறுவனத்துடன் இணைந்திருப்பதாக தனது ட்விட்டர் ப்ரோபைல் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அச்சு, காட்சி மற்றும் டிஜிட்டல் ஊடக தளங்களில் 25 ஆண்டுகளுக்கும் மேல் அனுபவம் வாய்ந்த புகாலியா தற்போது குயின்ட் இணையஇதழின் தலைமை பொறுப்பில் உள்ளார்.

இதற்கு முன் ஸ்டார் நியூஸ், சி.என்.பி.சி. போன்ற நியூஸ் சேனல்களின் நிர்வாக பொறுப்பில் இருந்த இவர் ஆரம்பகாலத்தில் நவபாரத் டைம்ஸ் இதழில் பணியை துவக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

ஊடகத்துறையில் புதிதாக கால்பதிக்க நினைக்கும் நிறுவனங்களுக்காக பணியாற்றிய அனுபவசாலியான புகாலியா அதானி குழுமத்துடன் இணைந்திருப்பது அம்பானி உள்ளிட்ட இந்திய ஊடக நிறுவனங்களுக்கு போட்டியை உருவாக்கியுள்ளதாகவே கருதப்படுகிறது.

More articles

Latest article