டெல்லி:  மகாராஷ்டிரா மாநில முன்னாள் எம்.பி. சஞ்சய் நிருபம் காங்கிரஸில் இருந்து நீக்கம் செய்து அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைமை அறிவித்து உள்ளது. கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால், அவர்கள் கட்சியில்   6ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் அறிவித்து உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜகவுக்கு எதிராக,  உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவனாவுடன் காங்கிரஸ், சரத்பவார் கட்சி உள்பட சில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன. இதையடுத்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சியான சிவசேனை(உத்தவ் அணி) 17 மக்களவைத் தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்தது. இதற்கு அம்மாநில முன்னாள் காங்கிரஸ் எம்.பி. சஞ்சய் நிருபம் எதிர்ப்பு தெரிவித்தார்.  “மும்பையில் ஒருதலைப்பட்சமாக வேட்பாளர்களை நிறுத்தும் சிவசேனாவின் (யுபிடி) முடிவை ஏற்றுக்கொள்வது காங்கிரஸை அழிக்க அனுமதிப்பதற்கு சமம் என குற்றம் சாட்டியிருந்தார்.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனாவுடன் சீட் பங்கீடு விவகாரத்தில் காங்கிரஸை கடுமையாக சாடினார். வரவிருக்கும் லோக்சபா தேர்தலில் சிவசேனாவுடன் (யுபிடி) சீட் பகிர்வு பேச்சுகளுக்கு மத்தியில் தனது கட்சி தலைமையை தாக்கிய சில நாட்களில் காங்கிரஸில் இருந்து நீக்கப்பட்டார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, மும்பை வடமேற்கு தொகுதி உட்பட மும்பையில் உள்ள 6 மக்களவைத் தொகுதிகளில் நான்கு தொகுதிகளுக்கு தனது வேட்பாளர்களை அறிவித்ததை அடுத்து, மும்பை வடக்கின் முன்னாள் எம்.பி.யான நிருபம், காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைமையைத் தாக்கினார்.

ஏற்கனவே, நிருபம், மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலின்போது சிவசேனைக்கு எதிராக கருத்து தெரிவித்த நிலையில், அவரை  மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கம் செய்து கட்சியின் தலைமை எச்சரித்தது. ஆனால், அதையும் மீறி, தற்போது, மீண்டும் விமர்சனம் சய்த நிலையில், அவரது பெயரை,  மக்களவைத் தேர்தலுக்கான காங்கிரஸ் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் இருந்து காங்கிரஸ் தலைமை  நீக்கம் செய்தது.  இதனால், அவர் காங்கிரஸ் தலைமைமீது அதிருப்தி அடைந்த நிருபம  பாஜக அல்லது சிவசேனா கட்சியில் சேரலாம் என தகவல்கள் பரவின.

இதைத்தொடர்ந்து, சஞ்சய் நிருபத்தை கட்சியில் இருந்து நீக்கி காங்கிரஸ் தலைமை அறிவித்து உள்ளது.  காங்கிரஸுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி,  சஞ்சய் நிருபத்தை 6 ஆண்டுகளுக்கு கட்சியில் இருந்து நீக்கம் செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஒப்புதல் அளித்துள்ளதாக வேணுகோபால் அறிப்பு வெளியிட்டு உள்ளார். இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கூறிய சஞ்சய் நிருபம், தான்,  காங்கிரஸ் தலைவருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பிய பிறகு, கட்சி தலைமை தன்னை டிஸ்மிஸ் செய்துள்ளதாக கூறினார்.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு தனது ராஜினாமா கடிதத்தின் ஸ்கிரீன் ஷாட்டைப் பகிர்ந்த நிருபம், எனது எக்ஸ் வலைதளத்தில், “நேற்றிரவு எனது ராஜினாமா கடிதத்தை கட்சி பெற்றவுடன், அவர்கள் என்னை வெளியேற்ற முடிவு செய்ததாகத் தெரிகிறது. இது போன்ற அவசரத்தைப் பார்ப்பது நல்லது. இந்த தகவலைப் பகிர்ந்தேன். ”

சஞ்சய் நிருபம், மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக கூட்டணியில் சஞ்சய் நிருபம் இணைவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கெனவே  விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.