53 வயதானபிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், உடல்நலக் குறைவால் (குடல் தொற்று) மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை சிகிச்சைப்பலனின்றி மரணமடைந்தார்.

2018-ல் புற்றுநோயால் (நியூரோஎண்டோகிரைன் டியூமர்) பாதிக்கப்பட்டு லண்டனில் சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இர்பான் கான் தாயார் சயீதா பேகம் கடந்த வாரம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவரது நெருங்கிய நண்பரும் திரைப்படத் தயாரிப்பாளருமான சந்தீப் சிங் இர்ஃபானுக்கு இறுதி அஞ்சலி எழுதியுள்ளார் .

https://www.instagram.com/p/B_j-6STptbW/

கடினமான காலங்களில் தனக்கு ஆதரவாக நின்றதற்காக இர்ஃபானுக்கு நன்றி தெரிவித்த சந்தீப் உங்களின் இந்த இறுதி சடங்கை சுமப்பது என் மனம் கனக்கிறது . என்னுடைய நெருக்கடியான நேரத்தில் பெரும்பாலானோர் விலகி செல்லும்போதும் நீங்கள் என்னுடன் இருந்துள்ளீர் . இருந்தீர்கள் அல்ல இன்னமும் இருக்கின்றீர். ஏனென்றால் மனிதம் இறப்பதில்லை .

உங்கள் ஆளுமை, உங்கள் ஒளி, சினிமா மீதான உங்கள் அன்பு மற்றும் உங்கள் வாழ்க்கை தத்துவம் தொடர்ந்து ஒரு உத்வேகமாக இருந்து என்னை வழிநடத்தும்.

“கடைசியாக ஒரு முறை இர்ஃபான் பாயுடன் என்னை நடக்க அனுமதித்த கடவுளுக்கு நன்றி. உங்கள் ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பல கோடி பேர் இங்கு இருக்க விரும்பியபோதும் விடைபெறுவதற்கான வாய்ப்பைப் பெற்றிருப்பதை நான் பாக்கியமாக உணருகிறேன்.. நீங்கள் விரைவில் போய்விட்டீர்கள், பாய் என கதறியுள்ளார்.

அவரது இறுதி சடங்கை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, அவரது செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கை வெளியிட்டார் . அதில் “எல்லோரும் இறுதி மரியாதை செலுத்தி, அவர் காலமானதற்கு இரங்கல் தெரிவித்தனர். அவருடைய அமைதிக்காக நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம், அவர் இன்று ஒரு நல்ல இடத்தில் இருக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர் தனது சண்டையில் பலமாக இருந்தார், இந்த இழப்பில் நாம் அனைவரும் ஏற்று கொள்ள தான் வேண்டும் என கூறியிருந்தார் .

இர்பான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்த வண்ணம் உள்ளனர்.