ரியாத்:
சவுதி அரேபியாவில் உள்ள ஆடை கட்டுப்பாட்டை மீறி தனது போட்டோவை டுவிட்டரில் வெளியிட்ட பெண்ணை அந்நாட்டு அரசு கைது செய்துள்ளனர்.
சவுதி அரேபியாவில் பெண்களுக்கு என்று ஆடை கட்டுப்பாடு அமலில் உள்ளது. இச்சட்டம் அங்கு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஒரு பெண் தலை மறைப்பு இல்லாமல், நீண்ட தளர்வான முழு ஆடை அணியாமல், ஜாக்கெட் மற்றும் கலர் ஆடையை அணிந்திருந்தவாறு தனது போட்டோவை டுவிட்டரில் கடந்த மாதம் வெளியிட்டார்.
தான் இந்த ஆடையில் வீட்டை விட்டு வெளியே வந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த போட்டோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சிலர் இந்த போட்டோவை ரியாத் தெருக்களில் ஒட்டப்பட்டிருந்தது.
இது குறித்து அந்நாட்டு மத சட்டங்களை அமல்படுத்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து 20 வயதாகும் மலாக் அல் ஷெஹ்ரி என்ற அந்த பெண்ணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்ததாக அந்நாட்டில் இருந்து வெளியாகும் பத்திரிக்கை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.