மதுரையிலுள்ள சில குவாரி பெருமுதலாளிகள்  சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டுவருகின்றனர் என வழக்குத் தொடரப் பட்டு விசாரனை நடைப்பெற்று வந்தது. இவ்வழக்கில் தீர்ப்பளித்த மேலுர் நீதிபதி அவர்களுக்கு சாதாரண திருட்டுப் பிரிவுகளில் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார். இதனை  எதிர்த்து செய்யப் பட்ட மேல்முறையீட்டில்,  மணல் குவாரி அதிபர்களுக்கு சலுகை வழங்கிய மேலுர் நீதிபதி மீது துறைவாரி ஒழுங்கு  நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
adras-high-court-1
மதுரையிலுள்ள சில குவாரி பெருமுதலாளிகள் செய்யும் சட்டவிரோத சுரங்கத் தொழிலுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையின் ஆணைக்கு “வேண்டுமென்றே கீழ்ப்படியாத” மேலூர் நீதிபதி மகேந்திர பூபதி மீது நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை பெஞ்ச் வியாழக்கிழமையன்று பரிந்துரை செய்தது.
இந்தச் சட்டவிரோத குவாரியில் ஈடுபட்ட பெருமுதலாளிகளை சிறிய திருடர்கள் போல் நடத்திய விதம் மேலூர் நீதிபதி மீது சந்தகத்தை வரவழைக்கிறது என நீதிபதி பிஎன் பிரகாஷ்  கூறினார்.
justice pan
அவரிடம் நிலுவையிலுள்ள 98 வெவ்வேறு வழக்குகளுக்கு மதுரை மாவட்டப் போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ள அனைத்து குற்றங்களையும் கவனித்து அவைகளை சட்டத்திற்கு இணங்க செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு அனுப்புமாறும் நீதிபதி பிஎன் பிரகாஷ் உத்தரவிட்டார்.
உயர்நீதிமன்றம் மேலூர் நீதிபதிக்கு சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் அபிவிருத்திச் சட்டத்தின் (MMDA) கீழ் அல்லது தமிழ்நாடு சொத்து (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்த கருத்தில் கொண்டு, மற்றும் போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை அடிப்படையாக கொண்டு, அனைத்துக் குற்றச்சாட்டுக்களையும் கருத்தில் கொண்டு, தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந்த போதிலும் மேலூர் நீதிபதி இபிகோ பிரிவு 379 கீழ் ஒரு சிறிய குற்றத்திற்கான குறைந்த தண்டனையை வழங்கினார் என்பது எப்பொழுது உயர்நீதிமன்றத்திற்கு தெரியவந்ததோ அப்பொழுதே  மேலூர் நீதிபதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
குன்றுகள், நீர்நிலைகள், இடுகாட்டு நிலம் மற்றும் இதர அரசு சொத்துகள் சட்டவிரோத சுரங்கத்தொழிலுக்காக குவாரி உரிமையாளர்களால் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல் ஆதரவால் அப்பகுதியிலிருந்து மெதுவாக மறைந்து வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. “போலீஸார் அரை மனதோடு இபிகோ 379 பிரிவின் கீழும் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழும் முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்யும் முயற்சியை மேற்கொண்டனர்.
justice 1
“மதுரை மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் நடக்கும் சட்டவிரோத சுரங்கத்தொழிலைப் பற்றி நீதிமன்றத்தின் முதல் பெஞ்ச் தீவிரமாகக் கவனித்து, ஒரு நீதிமன்ற ஆணையரை நியமனம் செய்து அதைப் பற்றி எல்லாக் கோணங்களிலும் விசாரிக்க உத்தரவிட்டபோது விஷயங்கள் சூடுபிடிக்க ஆரம்பித்தது,” என்று நீதிபதி கூறினார்.
ஆனால் மேலூர் நீதிபதியோ ஒரு சிறு தண்டனையைக் கொடுத்து வழக்கை முடித்துள்ளார். இழப்பு ஏற்படுத்தும் நோக்கம் உள்ளதாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படாததால் இதைப் பெரும் குற்றங்கள் என கருத்தில் எடுத்துக்கொள்ள முடியாது என்று மேலூர் நீதிபதி கூறியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் சட்டவிரோதமாக குவாரி நடத்த அரசு சொத்துக்களை வெடி பயன்படுத்தி தகர்த்துள்ளதாக உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே குற்றம் சாட்டப்பட்டவர்கள் அவர்கள் செய்த செயலில் உள்நோக்கமில்லை எனவோ விளைவுகளைப் பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லை என்றோ சொன்னல் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
தூங்குபவரை எழுப்பலாம் ஆனால் தூங்குவது போல் நடிப்பவரை எழுப்ப முடியாது. மேலூர் நீதிபது இரண்டாம் வகையை சேர்ந்தவர் ஆகையால் அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு அல்லது ஒழுங்கு நடவடிக்கை அல்லது இரண்டையுமே துவக்க நீதிபதி பிரகாஷ் உயர்நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.