
பட்டியலின சமூகத்தை குறிப்பிட்டு இழிவாக விமர்சித்து பேட்டி அளித்த நடிகை மீரா மிதுன் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த நிலையில் தலைமறைவான அவர் திருவனந்தபுரம் சொகுசு விடுதியில் கைது செய்யப்பட்டார்.
விசிக பிரமுகர் வன்னி அரசு புகாரின் பேரில் சென்னை மத்தியக் குற்றப்பிரிவு சைபர் பிரிவு போலீஸார் மீரா மிதுன் மீது ஐபிசி பிரிவுகள் 153 ( இரு பிரிவுகள் இடையே கலவரத்தை தூண்டுதல்) 153(எ)1 (பேட்டி, பேச்சு, எழுத்து மூலம் இரு சமூகங்கள் இடையே மோதலை தூண்டுதல்) 505(1) (பி) (குறிப்பிட்ட சமூகத்திற்கு, அரசுக்கு எதிராக குற்றம் செய்ய தூண்டுவது) 505(2)(மக்களின் நம்பிக்கை, வழிபாட்டுக்கு எதிராக பேசுவது, நடப்பது) 3(1) r, 3(1)(u), 3(1) (s) of SC/ST prevention act (2வன்கொடுமை தடுப்புச் சட்டம்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
மீரா மிதுனின் காதலரான கலர் கோழி குஞ்சி எனப்படும் அபிஷேக் சேமியையும் போலீசார் கைது செய்து உள்ளனர்.
இந்நிலையில் இதுபற்றி பேசியுள்ள மீரா மிதுனின் சக பிக்பாஸ் போட்டியாளரான சனம் ஷெட்டி, “ சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறை மற்றும் சைபர் க்ரைம் பிராஞ்ச் பெருமை கொள்ள வைக்கிறது. கடந்த சில வருடங்களாகவே நாங்கள் பொறுத்துக்கொண்டு வந்த வெறுக்கத் தக்க பேச்சுகளுக்கான முடிவுக்காலம் இது!” என குறிப்பிட்டுள்ளார்.
[youtube-feed feed=1]