சென்னை

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு மரணம் அடைந்தார்.

90ஸ் கிட்ஸ் களின் அபிமான தொலைக்காட்சி தொகுப்பாளராக விளங்கியவர்களில் ஆனந்த கண்ணனும் ஒருவர் ஆவார்.  இவர் சன் மியூசிக் ஆரம்பிக்கப்பட்ட கால கட்டத்தில் பிரபலமடைந்தார்.  இவர் பல வெளிநாடுகளில் நடந்த கலை நிகழ்ச்சிகளைச் சுவையாகத் தொகுத்து வழங்கி உள்ளார்.

இவருடைய நகைச்சுவை பேச்சு பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.  இவர் தொகுப்பாளராக இருந்ததோடு மட்டுமின்றி பல தொலைக்காட்சி தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.  புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஆனந்த கண்ணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனந்த கண்ணன் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.  இவர் மறைவுக்குப் பல திரை பிரபலங்களும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இயக்குநர் வெங்கட் பிரபு தனது டிவிட்டரில் ”ஒரு சிறந்த நண்பர், சிறந்த மனிதர் தற்போது இல்லை.  எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனப் பதிந்துள்ளார்.