
சுபாஸ்கரன் தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனின் 19வது திரைப்படம் “டான்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்க, பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளார்.
இத்திரைபடத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, இதன் அதிகாரபூர்வ வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டது லைகா நிறுவனம்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் அவருடன் சேர்ந்து நடித்த பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்க தற்போது முன்னணி காமெடியனாக சூரி இந்த படத்தில் இணைந்துள்ளார்.
இந்நிலையில் டான் திரைப்படத்தில் தற்பொழுது நடிகர் சமுத்திரகனி இணைந்துள்ளார்.
[youtube-feed feed=1]Happy to welcome @thondankani sir to the sets of #DON 💥@Siva_Kartikeyan @KalaiArasu_ @LycaProductions @Dir_Cibi @anirudhofficial @priyankaamohan @iam_SJSuryah @sooriofficial @dop_bhaskaran @Inagseditor @Udaya_UAart @anustylist @tuneyjohn @DoneChannel1 pic.twitter.com/ZwxIexTVny
— Sivakarthikeyan Productions (@SKProdOffl) February 26, 2021