ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று குறித்த படமாகும்.
இந்த படத்தில் எம்.ஜி.ஆர் பாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்கிறார். விஷ்ணு வர்தன் இந்துரி மற்றும் சாய்லேஷ் ஆர் சிங் உள்ளிட்டோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கே.வி.விஜயேந்திர பிரசாத் கதை எழுதியுள்ளார்.
நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு மதன் கார்கி பாடல்கள் எழுதுகிறார்.
ஜெயலலிதா போல தோற்றமளிப்பதற்காக ஸ்பெஷலான prosthetic மேக்கப் போடப்படுகிறது. அதற்காக கங்கனா அமெரிக்காவுக்கு சென்று prosthetic லுக் டெஸ்ட் எடுத்தார் என்றும் செய்திகள் தெரியவந்தது. ஜேசன் காலின்ஸ் என்ற ஹாலிவுட் புகழ் கலைஞர் தான் கங்கனாவின் தோற்றத்திற்காக இந்த அப்படத்தில் பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தலைவி படத்தில் முக்கிய ரோலில் நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இது குறித்து பதிவு செய்த சமுத்திரக்கனி, தலைவி திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய், செல்வி. கங்கனா ரணாவத், திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள், உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..வெல்வோம் என பதிவு செய்துள்ளார் சமுத்திரக்கனி.
"தலைவி" திரைப்படத்தில் எனக்கான படப்பிடிப்பு நிறைவடைந்தது…மிக்க மகிழ்ச்சி… பேரன்பான இயக்குனர் ஏ.எல்.விஜய் …செல்வி .கங்கனா ரணாவத் …திரு.அரவிந்த்சாமி மற்றும் என் உடன் நடித்த சக நடிகர்கள் தொழில்நுட்ப கலைஞர்கள்,உதவி இயக்குனர்கள் அனைவருக்கும் நன்றி..! வெல்வோம்..! pic.twitter.com/wZjegLxvl0
— P.samuthirakani (@thondankani) December 5, 2020