இயக்குனரும், நடிகருமான சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள பெட்டிக்கடை திரைப்படத் தின் டிரைலர் வெளியிடப்பட்டுஉள்ளது. படக்குழுவினர் நேற்று டிரையலரை வெளியிட்டனர்.
காவல் காப்பவர்கள் தங்கள் கடமையை சரியாக செய்திருந்தால் நாட்டை சூறையாடும் கார்பரேட் கம்பெனிகள் நாட்டில் நுழைந்திருக்காது என்னும் மைய கருவை கொண்டு இப்படத்தினை உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் இசக்கி கார்வண்ணன்.
இந்த படத்தில் கதாநாயகனாக சமுத்திரகனி மற்றும் வீரா நடித்துள்ளனர். மற்றும் நடிகை சாந்தினி மருத்துவராக நடித்துள்ளார். விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.