இயக்குநராக சினிமா பயணத்தை ஆரம்பித்து, நடிகராக அவதாரம் எடுத்த ஆர்.சுந்தரராஜன், மணிவண்ணன், மனோபாலா, சந்தான பாரதி வரிசையில் சேர்ந்து விட்டார், சமுத்திரக்கனி.

இயக்கத்துக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைத்து விட்டு, சகட்டு மேனிக்கு வில்லன், கதையின் நாயகன், காமெடி என பல வித ரோல்களில் நடிக்கும் சமுத்திரக்கனி நடித்துள்ள புதிய படம் ’’ஏலே’’.

ஹலீதா ஷமீம் இந்த படத்தை டைரக்டு செய்கிறார், ‘ஏலே’ குறித்து ஹலிதா தெரிவித்த தகவல்கள் இது :

“சமுத்திரக்கனிக்கு இந்த படத்தில் அடாவடியான வேடம். மனைவியை பிரிந்து இரு குழந்தைகளுடன் வாழும் அவர், பிள்ளைகளை நல்ல படியாக வளர்த்து ஆளாக்க நினைக்கிறார். ஆனால், பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது” என்கிறார், இயக்குநர் ஹலிதா.

படத்தின் முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டது…

தியேட்டர்களில் தான், படத்தை ரிலீஸ் செய்வது என்பதில் தீர்மானமாக உள்ளார், தயாரிப்பாளர்.

இந்த படத்தில் சைக்கிளில் சென்று தெருத்தெருவாக ஐஸ்கிரிம் விற்கும், வியாபாரியாக நடித்துள்ளார், சமுத்திரக்கனி.

– பா. பாரதி