ஐ.பி.எல் தொடரின் நேற்று இரவு போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ், சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது.
ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டேவிட் வார்னர், ஷிகர் தவான் ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் பொறுமையாக ஆடினார்கள். ஆனால் டெல்லி வீரர் அமித்மிஸ்ரா சீற்பாக பந்த் வீச ஷிகர் தவான் மற்றும் முன்ணி வீரர் யுவராஜ்சிங்அமித் மிஸ்ரா விடம் அவுட் ஆகி ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளித்தார். கனே வில்லியம்சன் 27 ரன்கள் எடுத்த நிலையில் கிறிஸ் மோரிஸ் பந்து வீச்சில் போல்டு அனார். ஐதராபாத் அணி 146 ரன்கள் 20 ஒவீர்களில் எடுத்தது. மோரிஸ் 4 ஓவர்களில் 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டையும் எடுத்தார்.
13180834_10153647351763581_860097641_n
இதனையடுத்து 147 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் டெல்லி வீரர்கள் விளையாடினர். தொடக்க ஆட்டக்காரர்களாக டி காக்கும், அகர்வாலும் களமிறங்கினர். அகர்வால் ஆட்டமிழந்தாலும், டி காக் பொறுமையாக விளையாடி ரன்களை சேர்த்தார். ஆனால் நடுவரின் தவறான கணிப்பால் டி காக் பரிதாபமாக ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஷப் பாண்ட்டும் மற்றும் சாம்சனும் ஜோடி சேர்ந்தனர். இவர்கள் பொறுமையாகவும் பதற்றமும் இல்லாமல் ரன்களை சேர்த்தது. டெல்லி அணி எளிதில் வெற்றி இலக்கை எட்ட முடிந்தது. 3 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் 18.1 ஓவர்களில் எடுத்து டெல்லி அணி வெற்றியை பெற்றது.