ஒரே பதவியில் இருந்த ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும்! மத்தியஅரசு கொள்கையை உறுதிபடுத்தியது உச்சநீதி மன்றம்…

Must read

டெல்லி: ஒரே பதவியில் இருந்து ஓய்வுபெறும்  ஓய்வூதியதாரர்களுக்கு ஒரே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்ற மத்தியஅரசு கொள்கையை உச்சநீதி மன்றம் உறுதி செய்துள்ளது.

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யும் முப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியில் இருந்த மாறுபாடு குறித்து சர்ச்சை எழுந்த நிலையில், கடந்த 2015ம் ஆண்டு மத்திய,  முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு  ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கையை அமல்படுத்தியது.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்க போடப்பட்டது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூா்யகாந்த், விக்ரம் நாத் ஆகியோரைக் கொண்ட 3 நீதிபதிகள் அமர்வு விசாரணை நடத்தி வந்தது.  அப்போது, இது தொடர்பாக அமைக்கப்பட்ட பகத்சிங் கோஷியாரி கமிட்டி அறிக்கையின்படியே அறிவிக்கப்பட்டு இருப்பதமாகவும் இந்த கமிட்டி அறிக்கை கடந்த 2011ம் ஆண்டு டிசம்பா் 10-ஆம் தேதி, மாநிலங்களவையில் தாக்கல் செய்தது என்றும் கூறப்பட்டது.

‘இந்த வழக்கின் பல்வேறு கட்ட விசாரணைகளை தொடர்ந்து, பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. அதன்படி,  முப்படைகளிலும் ஓய்வுபெற்ற ராணுவ வீரா்களுக்காக மத்திய அரசு கடந்த 2015-இல் அமல்படுத்திய ‘ஒரே பதவி-ஒரே ஓய்வூதியக் கொள்கை’ செல்லுபடியாகும் என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது

தீர்பபில், அரசின் கொள்கை முடிவுகளுக்கு உள்பட்டு, இந்த ஓய்வூதியைக் கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது. அதில், அரசமைப்புச் சட்ட மீறலும் இல்லை. அரசமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்தும் முயற்சியிலோ அல்லது தன்னிச்சையான போக்கிலோ மத்திய அரசு செயல்படவில்லை.அதற்கு சட்டப்பூர்வ உத்தரவு ஏதும் இல்லை என்று கூறியுள்ளது.

மேலும் பகத்சிங் கோஷியாரி கமிட்டி அறிக்கையின்படி, ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வூதியம் மாற்றப்பட வேண்டும். ஆனால், வழக்கு நிலுவையில் இருந்தால், கடந்த முறை ஓய்வூதியம் மாற்றப்படவில்லை என்பதால்,  தகுதியுடைய அனைத்து ஓய்வூதியதாரா்களுக்கும் ஓய்வூதியைத்தை மாற்றி அமைத்து கணக்கிட்டு, அவா்களின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களில் செலுத்த வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

More articles

Latest article