2021 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக, கோவை தெற்கு, மொடக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் நாகர்கோயில் என மொத்தமாக 4 தொகுதிகளில் வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
20 ஆண்டுகளுக்கு முன்னதாக, கடந்த 2001ம் ஆண்டு, திமுக கூட்டணியில் இடம்பெற்றது பாஜக. அப்போதும் 4 தொகுதிகளையே வென்றது. காரைக்குடியில் முதலும் கடைசியுமாக அப்போது வென்றார் எச்.ராஜா. மயிலாடுதுறை, தளி, மயிலாப்பூர் என மொத்தமாக 4 தொகுதிகள்.
முதன்முதலாக ஒரு பெரிய கட்சியுடன் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி வைத்தபோது பெற்ற அதேயளவு தொகுதிகளைத்தான், இரண்டாம் முறையாக ஒரு பெரிய கட்சியுடன் தமிழ்நாட்டில் கூட்டணி வைக்கும்போதும் பாஜக பெற்றுள்ளது என்பதை கவனிக்க வேண்டியுள்ளது.
2001ம் ஆண்டிற்கு முன்னதாக, கடந்த 1996 தேர்தலில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டு வென்றிருந்தது பாஜக. அதுதான் தமிழக சட்டமன்ற தேர்தலில் அக்கட்சியின் முதல் வெற்றி. இப்போது மூன்றாவது முறையாக சட்டமன்றத்திற்குள் நுழைகிறது அக்கட்சி.