காதல் திருமணம் செய்து கொண்ட நடிகை சமந்தாவும், நாக சைதன்யாவும் விவாகரத்து செய்து பிரிவதாக அண்மையில் அறிவித்தனர்.

இவர்கள் பிரிவுக்கு முக்கிய காரணம் சமந்தாவின் ஆடை வடிவமைப்பாளர் பிரீதம் ஜுகல்கர் என்று டோலிவுட் வட்டாரத்தில் தகவல் வெளியானது.

இதையடுத்து பிரீதம் ஜுகல்கரை அவதூறாக திட்டியும், மிரட்டல் விடுத்தும் நாகசைதன்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு வருகிறார்கள்.

இதுகுறித்து பிரீதம் ஜுகல்கர் அளித்துள்ள பேட்டியில்.சமந்தாவை நான் சகோதரியாகவே பார்க்கிறேன். அவரை சகோதரி என்றே அழைக்கிறேன். எங்களுக்குள் தவறான தொடர்பு இல்லை என்பது நாகசைதன்யாவுக்கு தெரியும். ஆனாலும் அவர் அமைதியாக இருப்பது வருத்தம் அளிக்கிறது. எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளேன்” என்றார்.