டிகை சமந்தா கொரோனா லாக்டவுனில் தனது கணவர் நாக சைதன்யா மற்றும் செல்ல நாய்க்குட்டியுடன் ஐதராபாத்தில் வீட்டில் பொழுதை கழித்துக் கொண்டிருக்கிறார். புதிதாக ஒரு பொழுதுபோக்கும் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்.


வீட்டு மொட்டை மாடியில் மாடிதோட்டம் அமைத்து பராமரித்து வருகிறார் சமந்தா. சத்தான காய், கீரை வகைகளை வளர்க்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,’ஒவ்வொரு முறையும் ரசிகர்கள் என்னிடம், உங்களுடைய ஹாபி (பொழுதுபோக்கு) என்ன என்று கேட் பார்கள். ’நடிப்பு’ என்பேன் , உடனே அவர்கள் ’அது உங்கள் தொழில், நாங்கள் கேட்டது ஹாபி’ என மீண்டும் கேட்பார்கள். எனக்கு அதற்கு பதில் சொல்லி போரடித்துவிட்டது. இப்போது அதற்கு விடை கிடைத்திருக்கிறது. மாடியில் தோட்டம் அமைத்து பராமரிப்பது தான் எனது ஹாபி’ என்றார்.

சமந்தா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும், ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கிறார்.இதில் நயன்தாராவும் அவருடன் இணைந்து நடிக்கிறார்.