சமந்தாவும், நாக சைத்தன்யாவும் கடந்த 2017, அக்டோபர் 7-ம் தேதி இந்து – கிறிஸ்டியன் என இரு முறைப்படி திருமணம் செய்துக் கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் கோலாகலமாக நடந்தது.
இதற்கிடையே சமந்தா கடந்த ஜூலை மாதம் ட்விட்டரில் தனது பெயரை ‘எஸ்’ என மாற்றியதிலிருந்து, அவர் நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்யவிருப்பதாக தகவல்கள் வலம் வந்தன.
இதற்கு முற்றுப்புள்ளி வைத்தனர் சமந்தா – நாக சைத்தன்யா இருவரும். அதோடு நாக சைத்தன்யா குடும்பத்தினர் ரூ.200 கோடி ஜீவனாம்சமாக வழங்க முன்வந்த நிலையில் அதை சமந்தா மறுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.
தற்போது ட்விட்டரில் மீண்டும் தனது பெயரை திருமணத்திற்கு முன்பு இருந்ததைப் போல, சமந்தா எனவும் யூசர் நேமை சமந்தா பிரபு எனவும் மாற்றியிருக்கிறார்.
https://www.instagram.com/p/CUtYnBYBhbA/
இது ஒருபுறமிருக்க, சமந்தாவும், நாக சைத்தன்யாவும் திருமணம் செய்து இன்றோடு நான்காண்டுகளாகிறது. ஆனால் இந்த திருமணநாளில் அவர்கள் ஒன்றாக இல்லை. இந்நிலையில் இன்று தனது இன்ஸ்டாகிராமில் சமந்தா தனது படத்தைப் பதிவிட்டு, ”பழைய காதலின் பாடல்கள் – மலைகளிலும் பாறைகளிலும் குளிர்காற்று வீசும் சத்தம், தொலைந்து மீட்டெடுக்கப்பட்ட படங்களின் பாடல்கள். பள்ளத்தாக்கில் மனச்சோர்வு எதிரொலி மற்றும் பழைய காதலர்களின் பாடல்கள். பழைய பங்களாக்கள், படிக்கட்டுகள் மற்றும் சந்துகளில் காற்றின் ஒலி” எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இதுவொரு ஃபேஷன் ஷோ-வுக்காக போடப்பட்ட போஸ்ட்.
https://www.instagram.com/p/CF_MKk0hj6P/
கடந்த வருடம் இதே நாளில், ”நீ எனக்கானவன் நான் உனக்கானவள், எந்த கதவு வந்தாலும் அதை நாம் ஒன்றாக திறப்போம். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என நாக சைத்தன்யாவுக்கு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.