கடந்த ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக தொடங்கப்பட்டது. உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி, விஜய் டிவியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10 மணிக்கும், சனி மற்றும் ஞாயிறுகளில் இரவு 9.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது.

பிக் பாஸ் வீட்டில் நேற்று (அக்டோபர் 4) இந்த வாரத்திற்கான கேப்டன்கள் தேர்வு செய்யப்பட்டனர். பாத்ரூம் சுத்தம் செய்யும் அணிக்கு ராஜூ ஜெயமோகனும், சமையல் அணிக்கு சின்னப்பொண்ணும், பாத்திரம் கழுவும் அணிக்கு நமீதாவும், ஹவுஸ் கீப்பிங் அணிக்கு பாவனியும் கேப்டனாகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ : நமீதா, அவரது வாழ்கையில் கடந்து வந்த மிக கடினமான பாதை பற்றி கண்ணீரோடு மிகவும் உருக்கமாக பேச ஒட்டுமொத்த பிக் பாஸ் ஹவுஸ் மேட்ஸ்களும் கண் கலங்கினர்.

இரண்டாவது ப்ரோமோ : நடிகை பாவனி தனது கணவர் மறைவுக்குப் பிறகு வாழ்ந்து வரும் வாழ்க்கை குறித்து கண்ணீரோடு மதுமிதாவிடம் பேசிக்கொண்டிருக்க இதை கவனித்த பிரியங்கா, கலகலப்பாகப் பேசி பாவனியை சிரிக்கவைக்கும் ப்ரோமோ வெளியானது.

3-வது ப்ரோமோ : பிரியங்கா , அபிஷேக்கை குற்றம்சாட்ட,“குறும் படம் போடுங்க பிக் பாஸ்” என அபிஷேக் ராஜா கேட்கும் ப்ரோமோ வீடியோ வெளியானது.