கடந்த 2017-ஆம் ஆண்டு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட சமந்தா, 4 ஆண்டுகள் திருமண வாழ்க்கைக்குப் பின் சில தினங்களுக்கு முன்பு நடிகை சமந்தா – நடிகர் நாக சைதன்யா இருவரும் விவாகரத்து செய்து கொள்வதாக அறிவித்தனர்.

விவாகரத்து அறிவிப்பை வெளியிட்ட பின் தற்போது முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார் சமந்தா.

தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் ஜூனியர் என்.டி.ஆர், நடத்தி வரும் ‘உங்களில் யார் கோடீஸ்வரர்’ நிகழ்ச்சியில் நடிகை சமந்தா சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் ரூ.25 லட்சம் வென்றதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சி வருகிற அக்டோபர் 14-ந் தேதி ஒளிபரப்பாக உள்ளது.

 

[youtube-feed feed=1]