நடிகர் மாமனார் சவால், நடிகை மருமகள் பதில் சவால்..

Must read

கொரோனா ஊரடங்கில் யோகாசனm செய்வது, ஷாப்பிங் செல்வது தன்னை பிஸியாக வைத்துக்கொண்டிருக்கிறார் சமந்தா. இணைய தளத்திலும் நேரம் கழிக்கிறார். தனது மாமனார் நாகார்ஜுனா , கிரீன் இந்தியா சவால் என்ற பெயரில் 3 மரக்கன்றுகளை நட வேண்டும் உனக்கு தெரிந்த 3 பேர்களை இந்த சவாலில் இணைக்க வேண்டும் என சமந்தாவுக்கு சவால் விடுத்தார். அதை ஏற்று 3 மரக்கன்றுகளை சமந்தா நட்டார். அவருக்கு நாகார்ஜுனா உதவி செய்தார்.

பின்னர் கிரீன் இந்தியா சவாலை தனது தோழி நடிகைகள் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தன்னாவுக்கும் தனது நெருங்கிய தோழி ஷில்பா ரெட்டிக்கும் விடுத்து ஒவ்வொரு வரும் தலா 3 மரங்கள் நட வேண்டும் எனக் சமந்தா கூறினார்.
நடிகை சமந்தா ஊரடங்கில் வீட்டில் பொழுதை போக்கி வந்தாலும் ஊரடங்கு முடிந்தவுடன் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்க தயாராக உள்ளார். இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்குகிறார். விஜய் சேதுபதி, நயன்தாரா ஜோடியுடன் முதன்முறையாக சமந்தாவும் இணைகிறார்.

More articles

Latest article