தெலுங்கு நடிகை சமந்தா அக்கினேனி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள அதிரடித் தொடரான தி ஃபேமிலி மேன் 2 உடன் அறிமுகமாகிறார்.
மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரிப் ஹஸ்மி, நீரஜ் மாதவ் உட்பட பலர் நடித்து வெளியான வெப் தொடர், தி ஃபேமிலி மேன். அமேசான் பிரைமில் வெளியான இந்த தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்தி பட இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே இந்தத் தொடரை இயக்கி இருந்தனர். இப்போது இதன் இரண்டாவது சீசன் தயாராகி உள்ளது. இதில் சமந்தா நடித்துள்ளார். இந்த தொடர் இந்த மாதம் ரிலீஸ் ஆவதாக இருந்தது. இந்நிலையில், பிப்ரவரி மாதத்துக்கு இதன் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே இந்த தொடரில் அவர் நெகட்டிவ் கேரக்டரில் நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அவருக்கு அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது.