க்னோ

மாஜ்வாதி கட்சி தனது நாடாளுமன்றத் தேர்தலின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணி இறுதியான நிலையில் 16 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று வெளியிட்டுள்ளார்.

2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் சமாஜ்வாதி கட்சி அதிக வாக்குகளைப் பெற்ற இடங்களின் வேட்பாளர்கள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளனர். அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் மெயின்புரி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர். ஷபிகுர் ரகுமான் பார்க் சம்பாலில் போட்டியிடுகிறார். லக்னோ மத்திய தொகுதியின் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினர். ரவிதாஸ் மெஹ்ரோத்ரா, லக்னோ மக்களவைத் தொகுதியில் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல், அம்பேத்கர்நகர் மாவட்டத்தில் உள்ள கடேஹரி தொகுதியில் உள்ள சமாஜ்வாதி கட்சியின் சிட்டிங் சட்டமன்ற உறுப்பினரான லால்ஜி வர்மா அம்பேத்கர்நகர் நாடாளுமன்ற தொகுதியில் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர் ராம்கோபால் யாதவின் மகன் அக்ஷய் யாதவ் பிரோசாபாத் தொகுதியிலும், தர்மேந்திர யாதவ் புடான் நாடாளுமன்றத் தொகுதியிலும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் உ.பி.யில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை இடம் என்ற தொகுதிப் பங்கீடு இறுதியாகவில்லை. ஆயினும் சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.