டெல்லி: பிரதர் மோடிடயின் பிரசாரம் விஷத்தால் நிறைந்துள்ளது, இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்துக்கள் இந்திய தேசிய காங்கிரஸின் கருத்துக்கள் அல்ல என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு 2வது கட்டத்தை எட்டி உள்ள நிலையில், அனல்பறக்கும் தேர்தல் பிரசாரத்துடன் சர்ச்சைகளும் தொடர்ந்து வருகின்றன. மோடியின் ராஜஸ்தான் தேர்தல் பிரசாரத்துக்கு காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இன்று ஊடகங்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் மூத்த தலைவரும், கட்சியின் பொது செயலாளரும், தகவல் தொடர்பு பொறுப்பாளருமானஜெய்ராம் ரமேஷ், மக்களவை தேர்தலின் முதல் கட்டத்தில் பா.ஜ.க. மிகவும் மோசமாக செயல்பட்டது. அதனால் மோடி கொந்தளிப்பில் உள்ளார். தற்போது வாக்குப்பதிவு நடைபெற உள்ள இரண்டாம் கட்டத்திலும் பா.ஜ.க. சிறப்பாக செயல்படப் போவதில்லை என்றவர், பிரதமர் மோடியின் நடவடிக்கைக் இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சியாகும் என்று குறிப்பிட்டார்.
பாஜகவின் “மோசமான செயல்திறன்” காரணமாக உண்மையான பிரச்சினைகளில் இருந்து பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப பாரதிய ஜனதா முயற்சிக்கிறது பிரதமர் மோடியின் பிரசாரம் இப்போது விஷத்தால் நிறைந்துள்ளது. அவர் பேசும் மொழி அவரது கொந்தளிப்பை வெளிப்படுத்துகிறது என்றார்.
முன்னதாக, சொத்து மறுபகிர்வுக்கான கொள்கையின் அவசியத்தை வலியுறுத்திய இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடா, அமெரிக்காவில் நிலவும் பரம்பரை வரி பற்றிய கருத்தைப் பற்றிப் பேசியதுடன், இவை விவாதிக்கப்பட வேண்டிய பிரச்சினைகள் என்று கூறியதைத் தொடர்ந்து ஒரு சர்ச்சை வெடித்தது. காங்கிரஸ் கட்சிக்கு எதிரானது அவரது கருத்து என விமர்சனம் எழுந்துள்ளது.
இந்த கருத்து குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்த ஜெய்ராம் ரமேஷ், பிட்ரோடா சொல்வது அவரது சொந்த கருத்துகள். அவை இந்திய தேசிய காங்கிரசின் கருத்துக்கள் அல்ல என தெரிவித்தார்.
“இது உண்மையான பிரச்சினைகளில் இருந்து கவனத்தை திசை திருப்பும் அவநம்பிக்கையான மற்றும் திட்டமிட்ட முயற்சி. பித்ரோடா தனது கருத்துக்களை வெளிப்படுத்த சுதந்திரம் உள்ளவர், தலைப்பை பரபரப்பானதாக மாற்ற வேண்டிய அவசியமில்லை. பித்ரோடா முக்கியமானதாகக் கருதும் பிரச்சினைகளில் தனது கருத்துக்களை மிகவும் சுதந்திரமாக வெளிப்படுத்துகிறார். இந்த குறிப்பிட்ட பிரச்சினையிலும் அவர் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை.
ஆனால், இந்தவிஷத்தில், பிரதமர் வேண்டுமென்றே, குறும்புத்தனமான மற்றும் தீங்கிழைக்கும், விஷம் கலந்த பிரச்சாரத்தில் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில் விமர்சித்து வருகிறார் என்று கூறினார்.
இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பித்ரோடாவின் கருத்து பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “சாம் பிட்ரோடாவின் கருத்துக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி முற்றிலும் அம்பலமானது. முதலில், அவர்களின் தேர்தல் அறிக்கையில் ‘சர்வே’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது, மன்மோகன் சிங்கின் பழைய அறிக்கை இது காங்கிரஸின் மரபு – சிறுபான்மையினருக்கு முதல் உரிமை உள்ளது. நாட்டின் வளங்கள், மற்றும் இப்போது அமெரிக்காவை மேற்கோள்காட்டி சாம் பிட்ரோடாவின் கருத்து, செல்வப் பகிர்வு குறித்து ஆலோசிக்கப்பட வேண்டும்… 55 சதவீத செல்வம் அரசாங்கத்தின் சொத்துக்களுக்கு செல்கிறது.” செல்வத்தைப் பங்கீடு செய்வதே அவர்களின் நோக்கம் என்பதை ஏற்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த கருத்துக்கள் ஒரு சர்ச்சையாக மாறிய பிறகு, சாம் பித்ரோடா , தனது கருத்து குறித்து விளக்கம் அளித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், அமெரிக்காவில் உள்ள பரம்பரை வரியை ஒரு உதாரணத்திற்கு மட்டுமே மேற்கோள் காட்டியதாகக் கூறி பிரச்சினையை குறைத்து மதிப்பிட முயன்றுள்ளார். 55 சதவிகிதம் எடுக்கப்படும் என்று யார் சொன்னது? இந்தியாவில் இப்படிச் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? பாஜகவும் ஊடகங்களும் ஏன் பீதியில் உள்ளன? நான் தொலைக்காட்சியில் எனது சாதாரண உரையாடலில் அமெரிக்காவில் அமெரிக்க பரம்பரை வரியை ஒரு எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டேன். காங்கிரஸ் உட்பட எந்தக் கட்சியின் கொள்கைக்கும் மக்கள் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் இவை என்று நான் சொன்னேன்” என்று விளக்கம் அளித்துள்ளார்.