பொதுவாக மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி ஓடி முடிந்த பிறகே அதன் தமிழ் டப்பிங் வெளியாகும். ஆனால், முதல்முறையாக குருப் மலையாளத்தில் வெளியான அன்று தமிழிலும் வெளியானது. படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதுவரை துல்கர் சல்மானின் எந்தப் படமும் இப்படியொரு வசூலை பெற்றதில்லை. இதனால், அவரது சல்யூட் படத்தையும் தமிழில் வெளியிடும் முயற்சிகள் நடக்கிறது.

தமிழில் 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆன்ட்ரூ சல்யூட்டை இயக்கியுள்ளார். அந்தப் படத்துக்கு திரைக்கதை எழுதிய பாபி – சஞ்சய் சல்யூட்டுக்கும் திரைக்கதை எழுதியுள்ளார்கள்.

குருப் படத்தில் துல்கர் கிரிமினலாக நடித்திருந்தார். சல்யூட்டில் அப்படியே உல்டா. போலீஸ்காரர்.