ராஞ்சனா படத்தின் மூலம் தனுஷை இந்தியில் அறிமுகப்படுத்தியவர் ஆனந்த் எல்.ராய். அவரது இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கும் படம்தான் அத்ரங்கி ரே. உடன் சாரா அலிகான், அக்ஷய் குமார் நடித்திருக்கிறார்கள். இசை ஏ.ஆர்.ரஹ்மான். டி சீரிஸ், கலர் யெல்லோ புரொடக்ஷன்ஸ், கேப் ஆஃப் காட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

இந்தப் படத்தின் தமிழ் டப்பிங்கை தனுஷ் பேசிமுடித்திருப்பதாகவும், படம் தமிழில் வெளியாவதாகவும் செய்திகள் கூறுகின்றன.

தமிழில் தனுஷுக்கு ரசிகர்கள் அதிகம் என்பதால் படத்தை தமிழில் வெளியிடுகின்றனர். தமிழ்ப் பதிப்புக்கு கலாட்டா கல்யாணம் என்ற பெயரை தேர்வு செய்திருப்பதாக தகவல்.