டெல்லி: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
கடந்த 2008ம் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இந்தியாவின் மிக பெரிய நகரமான மும்பையில் தொடர் 11 ஒருங்கிணைந்த துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டுவெடிப்புதாக்குதல் நடத்தினர். 26 நவம்பர் அன்று தொடங்கி நவம்பர் சனிக்கிழமை, 29 வரை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்களை நடத்தினர். இதில், 164 பேர் கொல்லப்பட்டனர்; குறைந்தது 308 பேர் காயப்படுத்தப்பட்டனர். இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டான். தாக்குதல்கள் பாக்கித்தானின் ஐஎஸ்ஐ ஆதரவுடன் நடத்தப்பட்டது.
இதை நினைவுகூறும் வகையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார்.
அதில், ‘26/11 கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதலில் தேசத்தை காக்கும் போது தங்கள் இன்னுயிர்களை தியாகம் செய்த அனைத்து தியாகிகளுக்கும் வணக்கம்.
உங்கள் தியாகத்திற்கு தேசம் என்றும் கடமைப்பட்டிருக்கும்.
ஜெய் ஹிந்த்.
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.