மும்பை

டிகர் ஷாருக்கான் ஓடிடி நிறுவனம் தொடங்குவதற்கு நடிகர் சல்மான்கான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் சொந்த பட நிறுவனம் ஒன்றை ரெட் சில்லிஸ் என்னும் பெயரில் நடத்தி வருகிறார்.  இந்த நிறுவனம் ஷாருக்கான் நடிக்கும் படங்களைத் தயாரித்து வருகிறது.   அத்துடன் மற்ற நடிகர்கள் நடிக்கும் படங்களையும் தயாரித்து வருகிறது.

இந்நிறுவனம் சமீபத்தில் பாபி டியோல் நடித்த லவ் ஹாஸ்டல் என்னும் படத்தை தயாரித்தது.   லவ் ஹாஸ்டல் படம் ஓடிடியில் வெளியாக நல்ல வரவேற்பைப்  பெற்றது.   இதைத் தவிர ஷாருக்கான் ஐபில் போட்டிகளில் கொல்கத்தா அணிக்கு உரிமையாளராக உள்ளார்.

இந்நிலையில் ஷாருக்கான் சொந்தமாக ஓடிடி தளம் ஒன்றைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.  இதற்கு எஸ் ஆர் கே பிளஸ் எனப் பெயரிட்டுள்ளார்.   இந்நிறுவனத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் அனுராக்  காஷ்யப் பங்குதாரராக உள்ளார்.  ஓடிடி தளம் தொடங்கியதற்கு பிரபல பாலிவுட் நடிகர் சல்மான்கான் பாராட்டு தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]