சேலம்: சேலம் மேற்குதொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் , தேர்தல் அறிவிப்பு காரணமாக அரசியல் கட்சிகளின் பிரசார கூட்டங்களில் மக்கள் கூடுவதால்,  கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, அரசியல் கட்சிகளின் கூட்டத்தில் கொரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க தேர்தல் ஆணையம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜிக்கு கொரோனோ தொற்று உறுதியாகி உள்ளது. அவர் கடந்த சில நாட்களாக தீவிரமாக தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வந்த நிலையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவருடன் நெருக்கமாக இருந்தவர்களும் சோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்கள் 2 பேருக்கு தொற்று உறுதியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

அழகாபுரம் மோகன்ராஜின் சொத்து மதிப்பு குறித்து தெரிந்துகொள்ள கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…

Affidavit-alagapuram mohanraj-corona

[youtube-feed feed=1]