`ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்றனர் ஆன்றோர்கள்…  ஆனால், ஆலயத்துக்கு சென்றால்,  அங்குள்ள சிலைகள், சிற்பங்கள் மட்டுமின்றி, பாரம்பரியம் மிக்க  தேர்கள் போன்ற சுவாமிகளை சுமந்து செல்லும் வாகனங்களும் சிதிலமடைந்து கிடப்பதை காணும்போது மனம் வேதனையில் துடிக்கிறது.

பழங்கால கோவில்கள், அந்த கோவில்களில் உள்ள தேர்கள், உற்சவ மூர்த்திகளை சுமந்து செல்லம் வாகனங்கள் போன்றவை புணரமைப்பின்றி பாழடைந்து வருகிறது. தமிழகஅரசு, கோவில்களின் புணரமைப்புக்கு போதிய நிதி ஒதுக்காமல், வருமானத்தை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளதால், பெரும்பாலான கோவில்கள் பாழ்பட்டு வருகின்றன.

`எங்கே ஓர் ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறதோ, அங்கே நாகரீகமான சமுதாயம் வாழவில்லை என்கின்றனர் பெரியார்கள், நம் தேசத்தின் ஆன்மாவான ஆலயங்களை பாதுகாக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

இங்கே படத்தில் உள்ளது,  சேலம் அயோத்தியாபட்டணம் கோதண்ட ராமர் திருக்கோவில் தேரின் அவலநிலை …

சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தை பழமையான கோயிலான கோதண்டராமர் கோவில், இராவண வதம் முடிந்து ராமர் பட்டாபிரேஷம் செய்துகொண்ட கோவில் என்று கூறப்படுகிறது. புராதன சிறப்பு மிக்க இந்த கோவிலில், அயோத்தி சென்று ராமரை வழிப்படுவதற்கு பதில், சேலம் அயோத்தியாப்பட்டணம்  ராமரை வழிப்பட்டாலே சகல நன்மைகளும் கிடைக்கும் என்பது ஐதிகம்.

புராதன சிறப்புமிக்க இந்த கோவிலில் ராமர் புனித காலடி பட்டதாலேயே அயோத்தியா பட்டணம் என்றும் கூறப்படுகிறது. கலைநயம் மிக்க இந்த கோவிலில் உள்ள கல்வெட்டுக்கள் கோவிலின் பெருமைகளை பறைச்சாற்றுகின்றன.

இவ்வளவு பெருமைக்க மிக்க கோவிலை புணரமைப்பதிலோ, அங்குள்ள திருத்தேர்களை போற்றி பாதுகாக்கும் முயற்சியை மாநில அரசும், மாநில இந்து அறநிலையத்துறையும் கண்டுகொள்ளா மல் உள்ளது.

தமிழக அரசின் அலட்சியம்  காரணமாக கோவிலின் சிற்பங்கள் கலையிழந்து வருவதோடு மட்டுமல்லாமல், சுவாமியை உற்சவத்துக்கு சுமந்துசென்ற அழகிய தேர்தல்களும் மழை, வெயிலில் கிடந்து உருக்குலைந்து பாழாகி வருகிறது. இதைக்காணும் பக்தர்கள் வேதனையோடு கண்ணீர் வடிக்கின்றனர்.

கோவிலின் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்டுள்ள இந்து அறநிலையத்துறை, கோவிலின் வருமானத்தில் ஆடம்பரமாக செலவு செய்து வரும் நிலையில், நாட்டின் புராதனச் சின்னங்களான கோவில்களையும், கோவிலுக்கு சொந்தமான பொருட்களையும் பேணி பாதுகாக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.