சேலம்
கோரோனா தொற்று காரணமாகச் சேலம் மாநகராட்சி சீல் வைத்துள்ள 70 இடங்களில் கடைகள் எதுவும் செயல்படக்கூடாது என உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று காரணமாகச் சேலம் மாநகராட்சி பல தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று குறித்து தீவிர கணக்கெடுப்பு நடைபெறுகிறது.
இந்த கணக்கெடுப்பில் கொரோனா பாதிப்பு உடையவர்கள் மற்றும் அவரக்ளுட தொடர்பில் உள்ளவர்கள் ஆகியோர் கண்டறியப்பட்டு அவர்கள் வசிக்கும் பகுதிகள் தடை செய்யபட்ட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அங்கிருப்பவ்ர்க்ள் வெளியே வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களை மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொடு அவர்கள் உடல் நிலை குறித்து விவரம் சேகரிக்கின்றனர்.
சேலம் மாநகராட்சிக்குட்பட்ட 70 பகுதிகளில் கொரோனா பரவுதலைக் கட்டுப்படுத்த 4 மண்டலங்களில் 14 கோட்டங்களில் 70 இடங்கள் தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் என சீல் வைக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளைச் சுற்றி 3 கிமீ தூரத்துக்கு அத்தியாவசிய கடைகள் உள்ளிட்ட எதுவும் செயல்படத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பகுதிகளில் வசிப்போருக்கு அடிப்படைத் தேவையான பொருட்கள் அவரவர் வீட்டுக்கே வழங்கப்படும் எனச் சேலம் மாநகராட்சி அறிவித்துள்ளது.