சேலம்:
கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாநகராட்சி மாறியுள்ளதாக, மாநகராட்சி ஆணையாளர் அறிவித்து உள்ளார்.
சேலம் மாநகராட்சி பகுதியில், கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்த சேலம் மாநகர் பகுதியை சேர்ந்த 11 பேரும் குணமடைந்து வீடு திரும்பியதன் மூலம் சேலம் மாநகரம் கொரோனா இல்லாத மாநகரமாக அறிவிக்கப்பட்டுள்ளது
அங்கு கடந்த 21 நாட்களாக புதியதாக யாரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படாததைத் தொடர்ந்து, விரைவில் பச்சை மண்டலமாக சேலம் மாநகராட்சி மாறும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சுதிர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட அம்மாப்பேட்டை, கொண்டாலம்பட்டி மண்டலங்களை சேர்ந்த 11 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தனர். தொடர் சிகிச்சைக்கு பின்னர், அவர்கள் குணமடைந்த நிலையில், 11 பேரும் வீடு திரும்பினர்.
மேலும், கடந்த 21 நாட்களுக்கு மேலாக மாநகர் பகுதியை சேர்ந்த யாருக்கும் புதிதாக தொற்று ஏற்படாததால், கொரோனா இல்லாத மாநகரமாக சேலம் உருவெடுத்துள்ளது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் 35 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், 30 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.