சென்னை

மிழ்நாடு மின் வாரிய அலுவலகங்களில் செய்யப்பட்டு வந்த எல் ஈ டி பல்புகள் விற்பனை திடீரென நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் வருடம் மத்திய அரசு அறிவித்த உஜாலா மின் திட்டத்தின் படி குண்டு பல்புகளுக்கு பதிலாக எல் ஈ டி பல்புகள் பொருத்த திட்டமிடப் பட்டது.    எல் ஈ டி பல்புகளுக்கு குண்டு பல்புகளை விட 10% மின்சாரமே செலவாகும் என்பதால் நாடு முழுவதும் இந்த பல்புகளை மின் வாரிய அலுவலகங்களில் விற்பனை செய்ய திட்டம் தீட்டப்பட்டது.

இந்த பல்புகளை எனர்ஜி எஃபிஷியன்சி சர்வீஸ் என்னும் தனியார் நிறுவனம் தயாரித்து வருகிறது.    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டத்தில் இணைந்த தமிழக அரசு மின்வாரிய அலுவலகங்களில் இந்த நிறுவனத்தின் ஏஜன்சி இடமிருந்து பல்புகள் வாங்கி விற்பனை செய்து வருகிறது.    அந்த ஏஜன்சியால் மாநிலத்துக்கு தேவையான முழு அளவு பல்புகளை அளிக்க முடியவில்லை.

மேலும்  ஏஜன்சி நிறுவனத்துக்கு தர வேண்டிய தொகையை தராமல் பாக்கி வைத்துள்ளது.   அதனால் நிறுவனம் ஏஜன்சிக்கு பல்புகள் வழங்குவதை நிறுத்தி விட்டது.   அதனால் தமிழக மின்வாரியத்துக்கு ஏஜன்சியால் பல்புகளை வழங்க முடியாததால் பல்பு விற்பனை  திடீரென நிறுத்தப்பட்டு கடந்த ஒரு வாரமாக விற்பனை நடைபெறவில்லை.

இது குறித்து எனர்ஜி எஃபிஷியன்சி சர்விஸ் நிறுவனம், “பல மாநில மின் வாரியங்கள் எங்களிடம் இருந்து நேரடியாக பல்புகளை வாங்கி விற்பனை செய்து வருகின்றன.   அதனால் அம்மாநிலங்களில் எல் ஈ டி பல்புகள் அதிக அளவில் உபயோகப்படுத்தப் படுகின்றன.   தமிழ்நாடு மின் வாரியமும் அதே போல நேரடியாக வாங்கி விற்பனை செய்ய வேண்டும்”  என தெரிவித்துள்ளது.