சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது. அதன்படி, தற்போது பணியில் 12,483 பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழகஅரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.7,700 ஊதியத்திலிருந்து ரூ.10,000 உயர்த்தப்படுவதாக அறிவித்து உள்ளது.
மேலும், இனி வரும் காலங்களில் வாரத்தில் மூன்று நாட்கள் பகுதிநேர ஆசிரியர்கள் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும்.
பகுதி நேர ஆசிரியர்களுக்கான பதிவேடு தலைமை ஆசிரியரால் முறையாக பராமரிக்கப்பட வேண்டும்.
வருகைப் பதிவேட்டின் படி பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் மூலம் ஊதியம் விடுவிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.