சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஆண்டின் முதல்கூட்டத் தொடர் என்பதால் ஆளுநர் உரையாற்றுவது வழக்கமான நடைமுறை. இந்த நிலையில்,  ஆளுநர் தனது உரையை தொடங்கும் முன்பே, அவரதுஉரைக்கு  எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபையில் பரபரப்பு ஏற்பட்டது.

ஆளுநர் தொடர்ந்து ஆங்கிலத்தில் உரையாற்றினார்.  அதற்கு எதிர்ப்பு தமிழக சட்டப்பேரவையில் ஆளுநருடன் எதிர்கட்சி உறுப்பினர்கள் வாக்குவாதம் செய்தனர்.  திமுக உறுப்பினர்கள் முழக்கத்தை அடுத்து பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

இதைத் தொடர்ந்து, ஆளுநர்  துரைமுருகன் மற்றும் ஸ்டாலினிடம் இது தற்போதைய சட்டமன்றத்தின் கடைசி அமர்வு என்றும் அவர்கள் விவாதத்தில் பங்கேற்பதன் மூலம் அதை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் கூறினார்; ஆனால் துரைமுருகன் தனது தலைவர் ஸ்டாலின் சில பிரச்சினைகளை எழுப்ப விரும்புகிறார் என்றார்

இதற்கு ஆளுநர் “தயவுசெய்து கோபப்பட வேண்டாம்; அமர்வை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்; திமுக தலைவர்கள் பிரச்சினைகளை எழுப்புவதில் உறுதியாக இருந்ததால், ஆளுநர் நீங்கள் ஒரு போராட்டத்தை பதிவு செய்ய விரும்பினால் தயவுசெய்து மேடையில் இருந்து வெளியேறுங்கள் & சில நிமிடங்களுக்குப் பிறகு திரும்பி வாருங்கள்”; இதற்குப் பிறகு ஸ்டாலினும் மற்றவர்களும் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். இதையடுத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர்.